ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள ஷடர் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் ஒன்றில் மோட்டார் சைக்கிள் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதலை நடத்தியுள்ளான்.இந்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
இதேபோல் அன்பர் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 போலீஸ் அதிகாரிகள் மரணமடைந்தனர். இந்த இரு தாக்குதல்களிலும் சேர்த்து 70 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பெற்றுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி கூறியதாவது:-
ராணுவ வீரர்களிடம் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்ததையடுத்து அப்பாவி பொது மக்களை அவர்கள் குறி வைத்துள்ளனர் .இந்த தாக்குதல்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தோல்வியை காட்டுகிறது. என தெரிவித்துள்ளார்.
Post a Comment