சுற்றுலா இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி சிறப்பாக செயற்படுமா என்ற இலங்கை ரசிகர்களின் கேள்விக்கு இலங்கை வீரர்களின் ஆட்டத்தைக் காண ஒட்டுமொத்த இலங்கை தேசமும் கண்டி மைதானத்தை நோக்கி பார்வையைத் திருப்பியுள்ளது. அரசியல் தலையீடு மற்றும் நிர்வாக தலையீடுகளினால் அசமந்த பெருபேறுகளை தொடர்ந்து காட்டிவரும் இலங்கை அணி புத்துயிர் பெறுமா
என்பது சந்தேகமே? இலங்கை அணி தோல்விகளை சந்திக்கும் பொழுது எல்லாம் பக்கபலமாய் இருந்த இலங்கை ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.
இதனை தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற காட்சிகள் உணர்த்தின. எனவே தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முகமாகவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் எண்ணத்துடனும் இலங்கை வீரர்கள் தங்களது முழுமையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினால் மாத்திரமே இன்றைய போட்டியில் இந்தியாவை சமாளிக்க முடியும். பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று பி.ப 2.30 மணிக்கு இடம்பெறும் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment