இந்த வருடம் நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 05 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். சசிகரன் கரிஸ் 173 புள்ளிகளையும், கஜேந்திரன் லக்சாயினி 170 புள்ளிகளையும், இராமச்சந்திரன் தட்சாயினி 168 புள்ளிகளையும், தேவராசா யதுர்சிக்கா 161 புள்ளிகளையும் , சசிகுமார் தருசாந்தன் 158 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
திருமதி. சுபாஜினி கங்காதரன் ஆசிரியை அவர்களின் வழிகாட்டலின் கீழ் இவ் மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கும் பாடசாலை சார் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அதிபர் திரு. க. சிவலிங்கராஜா அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பாடசாலை சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. கற்றல் சார் நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment