நன்னெறிப்படுத்தல்
இயல்பூக்கங்களை நன்னெறிப்படுத்தல் நன்று. போரூக்கத்தைப் போட்டிகளிலும் பாலூக்கத்தை ஓவியத்திலும் குழுவூக்கத்தை சமூக தேவையிலும் நன்னெறிப்படுத்தலாம்.
பிராய்டின் உளப்பகுப்பாட்டுக் கொள்கை
சிக்மன் பிராய்டே முதலில் இக்கோட்பாட்டை அறிமுகஞ் செய்தார். இவர் உள்ளத்தை நனவு நிலை, நனவிலி உள்ளம் என இரண்டாகப் பகுக்கின்றார்.
நாளாந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் நியாயமான நடத்தைகளும் நனவு நிலை உள்ளத்துடனேயே தொடர்புடையன. குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் நனவிலி உள்ளத்துள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை எவரும் நினைவுக்குக் கொண்டு வர முடியாது. அவைகள் பாலியல் ஆசைகள், வன்செயல் உணர்வுகள், நனவிலி உள்ளத்தின் ஒரு பகுதியாகி நனவடி உள்ளத்துள் ஒடுக்கப்படுகின்றன.
இவை அமுக்கப்பட்ட கம்பிச் சுருள்போல ஒடுக்கப்பட்டிருப்பதாகவும் வரமுடியாதவற்றை போலி உறக்க நிலை (உறக்கப் போலி)யில் நனவுக்குக் கொண்டு வரமுடியும் என அவர் கண்டார். இதற்கு சுயாதீன இயைபு முறையைப் பயன்படுத்தினார். இதிலே ஒருவன் உறக்கத்தில் இருக்கும் போது தான் உள்ளத்தில் உள்ள நனவுகள் யாற்றையும் சுயாதீனமாகக் கூறுவான். அவற்றிலிருந்து அவனது நடத்தையின் காரணங்களை அறிய முடியும்.
பிள்ளையின் பாலியல் நடவடிக்கையுடன் தொடர்பானவையே பெரும்பாலும் நனவிலி உள்ளத்துள் ஒடுக்கப்படுகின்றன. இன்பம் அனுபவிப்பது பிள்ளையின் குறிக்கோள். அதற்குத் தடை ஏற்பட்டால் பிறழ்வான நடத்தையில் அது ஈடுபடுகின்றது.
பிள்ளையின் பாலியல் தொடர்பான வளர்ச்சியில் பிராய்ட் நான்கு நிலைகள் பற்றிக் கூறுகின்றார். அவை
- 1. வாய் நிலை
- 2. குத நிலை
- 3. பாலுறுப்பு நிலை
- 4. மறைநிலை
வாய்நிலை
இப்பருவம் முதல் ஒரு வயது வரையாகும். இப்பருவத்தில் வாய், குழந்தை வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் முக்கிய உறுப்பாகும். வாயினால் பிள்ளை பெறும் உணர்ச்சிகளும் பாலியல் இன்பம் முக்கியமானது. முலைப்பாலூட்டப்படும் பொழுது வாய் மூலமும் தாய் மூலமும் பிள்ளை இன்பத்தைப் பெறுகிறது.
குதநிலை
இப்பருவம் ஒரு வயது முதல் இரண்டு வயது வரை (1-2) பிள்ளையின் வாழ்வில் மலசலங் கழித்தல் முக்கியமானது. அது பிள்ளைக்கு காமக் கிளர்ச்சிக்குரிய இன்பத்தைத் தருகின்றது. பிள்ளை விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்தில் மலசலங் கழிக்கும் போது அதை அளையும் போதும் இன்பம் அடைகின்றான். இதற்காகக் பிள்ளையை பயமுறுத்தவோ தண்டிக்கவோ கூடாது.
பாலுறுப்பு நிலை
இப்பருவம் இரண்டு முதல் ஐந்து வயது வரை (2-5) இப்பருவத்தில் பிள்ளை பாலுறுப்புக்களை கையாளுவதன் மூலமும் ஆடையின்றி விளையாடுவதன் மூலமும் காமக்கிளர்ச்சி அடைந்து இன்பம் பெறுகின்றான்.
மறைநிலை
இப்பருவம் ஐந்து முதல் பன்னிரெண்டு வயது வரை (5 – 12) இப்பருவத்தில் பிள்ளை பாலியல் தொடர்பான நாட்டங்கள் அற்றதாக இருக்கின்றது. 12ம் வயதில் பூப்படைவதுடன் மீண்டும் பாலியல் நாட்டம் காட்டத் தொடங்குகிறான்.
பிள்ளைகளின் உளச்சிக்கல்களுக்கு பிராய்ட் எதிர்ப்பால் தொடர்பான விளக்கம் அளிக்கின்றார்.
ஆண்குழந்தை தாயிடம் அன்பு கொண்டு தந்தையை எதிரியாகக் கருதுகின்றான்.
பெண் பிள்ளை தகப்பனை அதிகமாக நேசிப்பாள்.
பிராய்டின் ஆளுமைக் கொள்கை
மனிதனது ஆளுமை (நனவடி உளம்) அகம், அதியகம் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. இவை மூன்றும் வெளியுலகுடன் தொடர்புடையன.
இட் முழுவதும் நனவிலி உள்ளத்துள் அமைந்துள்ளது. இங்கு அடங்கியுள்ளவை உயிரியல் தேவை சார்ந்தவை. பிள்ளையிடம் அகம் என்னும் ஆளுமைக்கூறு வளர்ச்சி அடைகின்றது. அவனது செயல்களை உயிரியல் தேவைகளின் அடிப்படையில் நிகழ்வு குறைந்து, அறிவின் அடிப்படையில் நிகழ ஆரம்பிக்கின்றன. தன்னைப் பற்றிய கருத்தைப் பிள்ளை விருத்தி செய்கிறான். எது சரி எது பிழை என்பவற்றை விளங்கிக் கொள்கிறான்.
இந்த வகையில் பிள்ளையிடத்தில் மனச்சான்று வளர்ச்சி பெறுகிறது. இதனை பிராய்ட் அதியக் என அழைக்கின்றார். சிறந்த இலட்சியங்கள் அறநெறிகள், ஒழுக்கங்கள் என்பன ஒருவனது அதியக வளர்ச்சியிலேயே தங்கியுள்ளன. அதியகம் வளர்ச்சியடையும் போது அகமானது இட், அதியகம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் கூறாக தொழிற்படுகின்றது.
சிறுவர் மனோதத்துவ சுருக்க வரலாறு
Post a Comment