மானுட சக்தி - பாரதிதாசன் கவிதைகள்

 

தென்னிந்தியாவின் புதுவை மாநகரில் 1891ம் ஆண்டு சித்திரை மாதம் 29ம் திகதி பாரதிதாசன் பிறந்தார். சுப்புரெத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாரதியின் மீது கொண்ட தொடர்பின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என்ற புனைப் பெயராக மாற்றிக் கொண்டார். பழகு தமிழில் கவிதை தந்த பாரதியாரைப் பின்பற்றி பல கவிதைகளையும் இயற்றி தமிழ் மொழியை அலங்கரித்த 20ம் நூற்றாண்டு கவிஞர்களுள் பாரதிதாசன் மிகவும் முக்கியமான ஒருவராகும். 'பாவேந்தர்', 'புரட்சிக் கவிஞர்' எனும் சிறப்புப் பெயர்களைக் கொண்டு மக்கள் அவரை அழைத்தாலும் அந்தப் புதுவைக் கவிஞன் தாமே விரும்பிப் பெற்றது பாரதிதாசன் எனும் சிறப்புப் பெயராகும். பாமரர் முதல் பண்டிதர் வரை அவரை அழைப்பது அந்தப் பெயரால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு, தேச பக்திப் பாடல்கள், பாரதமாதா, பழைய காப்பியங்களில் பற்று போன்ற அம்சங்களைக் கொண்டு எழுச்சிமிக்க பாடல்களைப் பாடியவர். இவர் 1964.04.21ம் திகதியன்று இறைவனடி சேர்ந்தார். 

இவர் பாடிய பாடல்களுள் 'மானுட சக்தி', 'உதயசூரியன்' போன்ற கவிதைகள் பாடப்பரப்பினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்தவகையிலே மானுட சக்தியினூடாக மனிதத்துவத்தின் ஆற்றல் கொண்டு இவ்வுலகத்தினை பலர் ஆள்கின்றனர் என்பதையும் மனித சக்தியே எல்லாவற்றிற்கும் மேலானது என்பதையும் விளக்கியுள்ளார். அதேபோன்று உதயசூரியன் ஊடாக இயற்கையிலும், மக்களின் வாழ்க்கையிலும் ஏற்படுகின்ற மாற்றங்களை விளக்கிக் கூறியுள்ளார். 

'மானிடத் தன்மையைக் கொண்டு – பலர்
வையத்தை ஆள்வது நாம் கண்டதுண்டு
மானிடத் தன்மையை நம்பி – அதன்
வன்மையி னாற்புவி வாழ்வுகொள் தம்பி!

மானிடம் என்றொரு வாழும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன் இரு தோளும்
வானம் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்
(மானிட) மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த

வையத்திலே அவன் செய்தவரைக்கும் மானிடத்
தன்மைக்கு வேறாய் - ஒரு வல்லமை
கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
மானிடமென்பது புல்லோ? – அன்றி

மரக்கட்டையைக் குறித்திட வந்த சொல்லோ?
கானிடை வாழ்ந்ததும் உண்டு – பின்பு
கடலை வசப்படச் செய்ததும் அதுதான்
(மானிட) மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு
மானிடம் தன்னைத் தன் உயிரும் வெறுக்கும்
மானிடம் என்பது குன்று – தனில், வாய்ந்த
சமத்துவ உச்சியில் நின்று
மானிடர்க் கினிதாக - இங்கு
வாய்ந்த பகுத்தறி வாம் விழியாலே
வான்திசை எங்கணும் நீ பார் - வாழ்வின்
வல்லமை மானிடத் தன்மை என்றேதேர்'



Post a Comment

Previous Post Next Post