செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம்


செங்கலடி கணபதிநகர் விவேகானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் இன்று மாணவர்களால் கொண்டாடப்பட்டது. வித்தியாலய பிரதான மண்டபத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் திரு. க. சிவலிங்கராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இதன் போது மாணவர்களால் ஆசிரியர்களுக்கு 



ஞாபகார்த்த சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாடசாலை வளர்ச்சியில் இவ் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது என்று வித்தியாலய அதிபர் கருத்து தெரிவித்தார். ஆசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தனர். 


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post