இளம்பெண் கொலையில் கள்ளக்காதல் ஜோடி கைது தகாத உறவை பார்த்து விட்டதால் சம்பவம்

திருப்பரங்குன்றம் அருகே இளம்பெண் கொலையில் கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். தகாத உறவை பார்த்து விட்டதால் இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சபட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகள் ராஜலட்சுமி (வயது 21). இவர் கப்பலூரில்
உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார்.

 இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் ராஜலட்சுமி வேலைக்குச் செல்வதை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த (பிப்ரவரி) மாதம் 12–ந்தேதி வீட்டில் வளர்த்து வந்த ஆட்டுக்கு தண்ணீர் வைக்கச் சென்ற அவர் திடீரென்று மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் பொன்ராஜ் தனது மகள் ராஜலட்சுமியை காணவில்லை என்று புகார் தெரிவித்தார்.


இந்தநிலையில் அவரது வீட்டுக்கு அருகில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்குள்ள வைக்கோல் படப்பு இருந்த பகுதியில் பார்த்த போது சாக்குமூடையில் காயங்களுடன் ராஜலட்சுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக்காதல் ஜோடி
இதுபற்றி தகவல் அறிந்து பிணத்தை கைப்பற்றி ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். ராஜலட்சுமி காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி மேற்பார்வையில் ஆஸ்டின்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், சாமியப்பன், ஏட்டுகள் பாஸ்கரன், 

வேலுச்சாமி, பவளகாந்த் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இதில் அதே பகுதியைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியான சுந்தரராஜன் மனைவி சாந்தி (வயது49) என்பவருக்கும், சரவணன் (31) என்பவருக்கும் ராஜலட்சுமி கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தகாத உறவை பார்த்து விட்டதால்...
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:–
கள்ளக்காதல் ஜோடியான இவர்கள் தகாத உறவில் ஈடுபட்டு இருந்ததை ராஜலட்சுமி பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதை அவர் வெளியில் தெரிவித்து விடுவார் என்பதாலும், ஏற்கனவே சாந்தியிடம் நகை, பணத்தை சரவணன் கேட்டு வந்தநிலையில் நகைக்காகவும் ராஜலட்சுமியை இருவரும் சேர்ந்து தாக்கி சுவரில் தலையை மோதச் செய்து காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் அவர் மயங்கியதை தொடர்ந்து கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். இதன்பின் அவர் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு ஜோடி தோடு, கொலுசுகள் ஆகியவற்றை இருவரும் திருடி உள்ளனர். கொலை, கொள்ளையை மறைக்க ராஜலட்சுமியின் உடலை சாக்குமூடையில் திணித்து அங்குள்ள வைக்கோல் படப்பு அருகே வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த கொலையில் துப்புதுலங்காத நிலையில் போலீசார் இவர்களது நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்ததில் துப்புதுலங்கியதை தொடர்ந்து நடந்த விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாயின. இதுதொடர்பாக சாந்தி, சரவணன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ராஜலட்சுமியின் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Post a Comment

Previous Post Next Post