முன்பள்ளி ஆசிரியர்களின் பங்கு
சின்னஞ்சிறார்கள் தங்கள் தாய்க்கு அடுத்தபடியாக முன்பள்ளி ஆசிரியர்களையே நேசிப்பவர்கள். ஆசிரியரிடம் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஏராளம். தங்கள் மேல் ஆசிரியரின் அன்பும், ஆதரவும் குவிய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். பெற்றாருக்கு அடுத்தபடியாக ஆசிரியரே முக்கியமானவர் என நம்புகின்றவர்கள். இந்த அடிப்படை உறவு பிள்ளையின் எதிர்கால வாழ்வுக்கும், பள்ளி வாழ்க்கைக்கும் அடித்தளமாகின்றது. ஆசிரியர் மாற்றீடாக. அன்பு, ஆதரவு. கருணை, பாகுபாடற்ற தன்மை, உதவி, ஆகிய வற்றால் பிள்ளையின் உறவினை கட்டியெழுப்பவேண்டும். இதனாலேயே அன்பினால் உலகை ஆளலாம் என்றனர்.
ஆசிரியர் தனது கனிவான குரல் ஒலியினால், கண்களின் பார்வையினால், பிள்ளைகளது. பெயர்களைச் சுட்டி அழைப்பதால், பொறுமையும், சகிப்புத்தன்மையினாலும் பிள்ளைகளை தொட்டு அரவணைப்பதாலும், அடம்பிடிக்கும்போது பரிவுகாட்டி ஆதரிப்பதாலும், புதுப்புது செயல்பாடுகளில் ஈடுபடுத்தி மகிழ்விப்பதாலும், மிக அவதானமாக செவிமடுத்துக் கேட்டு ஊக்குவிப்பதாலும், பெற்றோரிடம் சாதகமாக கலந்துரையாடுவதாலும், பாராட்டுக்களால் சந்தோசமடையச் செய்து பாதுகாப்பளிக்கும் பண்புகளாலும், பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்குமிடையில் இறுகிய பிணைப்பை உருவாக்கலாம்.
ஆசிரியர், பிள்ளைகள் விளையாடும் போதும், கற்றற் செயற்பாடுகளில் ஈடுபடும் போதும் எல்லா வழிகளிலும் உதவுபவராக விளங்க வேண்டும். விளையாட்டுச் செயற்பாட்டிலிருந்து வேறொன்றுக்கு மாற்றும்போது, பிள்ளைகளை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு செயற்பாடும். ஒன்றைவிட மற்றது புதுமையாக, கவர்ச்சி கரமானதாக அமையத் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும். பிள்ளைகளை நிர்ப்பந்திக்கவோ, வற்புறுத்தவோ கூடாது. சாதகமான, அவர்கள் விரும்பும் செயற்பாடுகளை அறிமுகம் செய்ய வேண்டும். ஏற்ற வழிகாட்டல்களையும், எப்போதும் திறந்த முடிவுகளையுடைய வினாக்களையே கேட்டு, பிள்ளைகளின் சிந்தனைக்கு வேலை கொடுக்க வேண்டும். சிந்திக்க வைக்க வேண்டும்.
சிறுவர்கள் வீட்டிலிருந்து முன்பள்ளிக்கு மாறுவது முக்கிய நிகழ்வாகும். இம்மாற்றத்திற்குப் பெற்றோரின் ஈடுபாடும். முன்பள்ளியில் நடைபெறும் செயற்பாடுகளும், பிள்ளையினுடைய முழு விருத்திக்கு உந்துமத்தியாக விளங்க வேண்டும். பெற்றோருக்குத் தம் பிள்ளையை நன்கு தெரியும் பிள்னை பற்றிய செய்திகளை உரையாடலுடன் முடித்துக் கொள்வர்.
பெற்றோரின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் என்பது பிள்ளைகளின் பின்னணி, விருப்பு, வெறுப்பு போன்றவற்றை அறிவதே. பல முன்பள்ளி ஆசிரியர்கள் படிவங்கள் மூலம் செய்திகளைப் பெற்றுக் கொள்வர், சிவர் சிறு உரையாடலுடன் முடித்துக்கொள்வர்.
பெற்றார் ஆசிரியர் சங்கக் கூட்டங்கள் முக்கியமானது. இங்குதான் பிள்ளை பற்றிய அபிவிருத்திக் கருத்துக்களும், ஏனையவையும் பரிமாறப்படுகின்றன. முன்பள்ளியில் என்ன, எது நடைபெறுகின்றது? என அறிய உரிமையுண்டு பிள்ளைகள் எவ்வாறு உடையணிய வேண்டும். பாடசாலைக்கு எவற்றைக் கொண்டுவர வேண்டும், சத்துணவ பாதுகாப்பு என்பன பொதுவான உரையாடலாக இருக்கும்.
விளையாட்டுகள் மூலம் பிள்ளைகள் எவ்வாறு கற்றலில் ஈடுபடுகிறார்கள். என்ற செய்திகள் பரிமாறப்படுவது மிக முக்கியம். பெற்றார்களது ஆலோசனைகளைப் பெற்றார். ஆசிரியர் சங்கக் கூட்டத்தின்போது, நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக் கூட்டத்தின்போது பாடசாலையின் தேவைகள் கலந்துரையாடப்பட வேண்டும்.
ஒரு தலைசிறந்த முன்பள்ளிக் கல்வி நடைபெறுவதற்கு, பெற்றோரின் நாளாந்த வகுப்பறை ஈடுபாடு அவசியமானது. மாதாந்த முன்பள்ளி வேலைத்திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெற்றார். உதவியாளராகச் சோத்துக் கொள்ளப்பட வேண்டும். இது ஆசிரியருக்கு உதவுவது மட்டுமல்லாது, பெற்றாருக்கும் முன்பள்ளி பற்றிக் கற்றுக்கொள்வதற்கு, வழி காட்டும், அத்தோடு சிறார்களும் பெரியவர்களோடு சேர்ந்து பழகி உறவை வளர்த்துக் கொள்ள உதவும். பெற்றார் மூலம் பாரம்பரியங்களையும், திறன்களையும் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைப்பதால், அவர்கள் சிறந்த வள அளணியினராவார்.
ஒரு பிள்ளையின் பெற்றார். முன்பள்ளியில் கலந்து கொள்ளும் நாள், அப்பிள்ளைக்கு விசேட நிகழ்வாகவிருக்கும் பெற்றாரின் முன்பள்ளி ஈடுபாடு. அப்பிள்ளை ஆரம்பக் கல்விக்குச் செல்லும்போது, அப்பாடசாலையும் பிள்ளையும் பல நன்மைகளைப் பெற வாய்ப்புண்டு.
ஒரு முன்பள்ளியை ஒழுங்கு செய்து, பேணிவருவதற்குப் பெற்றாருக்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட வேண்டும். ஒரு அறிவித்தற் பலகை. அவர்களது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தி வைக்க வேண்டும். இதில் முன்பள்ளி பற்றிய அனைத்துச் செய்திகளையும் பெற்றார் அறியும்படி செய்தல் வேண்டும்.
தொடர்ச்சியான பெற்றார் ஆசிரியர் சந்திப்புக்கள், பிள்ளைகளது முன்னேற்றம், எதிர்காலத் திட்டங்கள் வகுத்தல், பற்றிய செய்திகளைப் பரிமாறிக் கொள்ளச் சந்தாப் பங்களை வழங்கும். பிள்ளைகளின் மதிப்பீடு, அவர்களது வளர்ச்சி பற்றிப் பெற்றாரோடு உரையாடலாம். ஆனால் ஒரு பிள்ளையை மற்றப் பிள்ளைகளோடு ஒப்பிட்டுக் கூறுதல் பொருத்தமில்லை. வீடுகளுக்கும் ஆசிரியர் சென்று வருவது பெற்றார். முன்பள்ளி, ஆசிரியர், பிள்ளை இவற்றிற்கிடையே ஒரு இறுக்கமான பிணைப்பை உருவாக்கும்.
பாடசாலையின் தேவைகளை நிறைவு செய்யும் சக்தியாகப் பெற்றார் விளங்குவர். நேவையான பொருட்கள். நிதி, சரீர உதவிகள் கிடைக்கும். இவை யாவற்றையும் செய்து முடிக்கும் திறனை ஆசிரியர் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றாரின் விழிப்புணர்ச்சியைத் தூண்டி இழுக்கும் ஆற்றல் ஆசிரியரிடையே உண்டு.
பெற்றார்கள்தான் வளங்களின் திறவுகோல், கல்வி, சுகாதார அபிவிருத்திக்கு, அவர்களது சிந்தனைகள். ஆலோசனைகள் பல வழிகளில் இளம்பராயக் கல்வி அபிவிருத்திக்குப் பங்களிக்கும் பெற்றார்கள் ஒத்தாசைகளை வழங்கவும். முன்பள்ளியிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ளவும் சந்தர்ப்பங்கள் உண்டு. பெற்றார்கள் எல்லோரும் சமமானவர்கள் அல்லர் வௌ;வேறு நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை, விருப்புக்கேற்ப செயற்படுபவர்கள் என்பதனையும் ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும்.
பெற்றாரது ஈடுபாடு, நிதி, உணவளித்தல் போன்ற செயற்பாடுகளில் வேறுபடலாம். ஆனாலும் அவர்களது ஈடுபாடும் பங்களிப்பும் நிதி சேகரித்தல் தொடக்கம் முன்பள்ளியில் கடமையாற்றும் ஆசிரியர்களை நியமித்தல், முன்பள்ளியின் முகாமைத்துவம் வரை பரந்து பட்டது' (ஆரம்பப் பிள்ளைப்பருவ விருத்தியின் கொள்கையும் பயிற்சியும் - 95)
போட்டிகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆளுக்காள் உதவும் வழிவகைகளையும், ஒத்துழைப்பை வழங்கும் மனப்பாங்கினையும், வளர்க்க முயல வேண்டும். பிள்ளைகளை மிகக்கவனமாக அவதானிக்க வேண்டும். அவர்களது செயற்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, அவர்களது இடர்பாடுகளைக் கேட்டறிய வேண்டும். பிள்ளைகளது இயல்பிறகும், விருப்பிற்கும் கையாளும் திறனுக்கேற்பவும். செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டும்.
ஆசிரியர்தான் பிள்ளையின் கற்றல் அணுகுமுறையின் திறவுகோல் ஆசிரியர் கவர்ச்சியானதும், மிகவும் விரும்பத்தக்கதுமான பல்வேறு சூழலை அமைத்து, பிள்ளைகளை ஆராய்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும். பெருங்குழுக்களாகவோ, சிறு குழுக்களாகவோ பிரித்து அடக்கிவைக்காது. தனித்தனியே ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடச் சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும். தான் ஒரு ஆசிரியர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, பிள்ளைக்கு உதவும் நண்பராக, உதவுகரம் நீட்டி பிள்ளையின் கற்றலுக்கு ஆதாரமாக விளங்குபவராகக் கருத வேண்டும்.
பிள்ளைகளது செயற்பாடுகளை முன்னெடுத்து நெறிப்படுத்துவதைவிட அவர்களது ஆர்வத்தைத் தூண்டி சிந்திக்கவும், அது பற்றிப் போவும், செய்தவற்றையும், சுற்றவற்றையும் விளக்கம் பெறவும் செய்தல் வேண்டும் முன்பள்ளி ஆசிரியா தனது செயற்பாடுகளில் நெகிழ்வு அல்லது வளைந்து கொடுக்கும் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் அவதானிக்கவும், கேள்வி கேட்கவும், விபரங்களைத் தெரிவிக்கவும், அதே வேளை கற்றற் செயற்பாட்டுத் தொடரின் ஆதாரமாகவும் செயற்பட வேண்டும்.
எதனைப் பிள்ளையினால் செய்யமுடியாது என்பதைவிட, எதனைப் பிள்ளையால் செய்ய முடியும் என்பதுதான ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தியின் முதல் அடிப்படை விடயமாகும். ஆசிரியரின் செயற்பாடுகள் பிள்ளைகளினால் ஆர்வத்துடனும், விருப்புடனும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், வளைந்து கொடுக்கக் கூடியதுமாகத் திட்டமிடுவது ஆசிரியரின் தலையாய கடமையாகும். இச்செயற்பாடுகள் பாடசாலையின் உள்ளேயும் வெளியேயும் மகிழ்ச்சியும், ஆரவாரமும் கலந்த மனோநிலையுடன், பிள்ளைகள் ஈடுபடுவதற்கு ஏற்றதாக. பல்வேறுவகையான செயற்பாடுகளை ஒழுங்கு செய்வதும் ஆசிரியரது முக்கிய பணியாகும். வெறுமனே பிள்ளைகள் ஓய்ந்துபோயிருக்க இடந்தரலாகாது. பிள்ளைகள் உதவி பெற்றுச் செய்வதைவிட, உதவி ஏதுமில்லாது செயற்பாடுகளைச் செய்வித்தல் ஆசிரியரது சிறப்பாகும் ஆசிரியரின் சரியான நேரத்தில், சரியான. பொருத்தமான தலையீடு சிறார்களின் கற்றற் தொடரைச் சிறப்பாக்கும். ஆசிரியர் தனது வகுப்புப் பிள்ளைகளை அறிந்து வைத்திருப்பது போல். பெற்றோரையும், சமூகத்தையும், அறிந்தும், புரிந்தும் கொள்ள வேண்டும். குடும்ப பழக்கவழக்கங்களை, வகுப்பில் பகிர்ந்து கொள்ளுமாறு பெற்றோரைக் கேட்கலாம். அவர்களுக்குத் தெரிந்தவற்றை ஆரம்ய பிள்ளைப்பருவ அபிவிருத்தி வகுப்பறையில் செய்து காட்டத் தூண்டலாம். இசைக்கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள், சமையல் அல்லது வேறு தொழில்களைச் செய்பவர்களைக் கொண்டு, அவை பற்றிய செய்திகளைக் கூறவோ அல்லது செய்து காட்டவோ வழிவகை செய்யலாம்
திறமையான முன்பள்ளி ஆசிரியர்கள். தாமே தேடி அறிவைப் பெருக்கிக் கொள்வர். பாண்டித்தியமுடையவர்களிடம் இருந்து பெறும் அறிவை விட, தாமாகவே பிள்ளைகளைக் கவனமாக உன்னிப்போடு அவதானிப்பதாலும், பிள்ளைகள். பெற்றோர்களோடு தொடாபாடலாலும், தமது முன்பள்ளி ஆசிரியர்களோடு கலந்து உரையாடுவதாலும். பயிற்சிகளில் கலந்து பங்குகொண்டு அனுபவம் பெறுவதாலும், வாசிப்பதாலும் தமது நிறமையை வளர்த்துச் கொள்ள முடியும் புதிய முன்பள்ளிப் பாடத்திட்டத்தைக் கற்று பயின்று பயிற்சியளிக்கும்போது ஆசிரியரின் திறமை பிரகாசிக்கும்.
கற்றல் நிலையங்கள் அல்லது செயற்பாட்டு நிலையங்கள். சிறு குழுக்கள், அல்லது தனியொரு பிள்ளை, சுதந்திரமாக ஒரு செயற்பாட்டில் ஈடுபடும் இடத்தைத் குறிக்கும். சில தரமான முன்பள்ளிகளின் கற்றல் நிலையங்களில் கட்டுமான திண்மங்கள், புதிர்கள். கணித விளையாட்டுக்கள். இயற்கைப் பொருட்களடங்கிய பகுதி, மணல், நீர், நீர்த்தொட்டி, களி, சோக், பேப்பர், விளையாட்டுக் குசினி, பாவைமூலை, புத்தகப்பை, இசைக்கருவிகள், நடன. நாடக உடைகளைக் கொண்டிருக்கும். விரும்பிய கற்றல் நிலையங்களில், செயற்பாடுகளில் மூழ்குவர். வேறு சில சுற்றல் நிலையங்களில் குறிப்பிட்டசெயற்பாடுகளுக்கான அமைப்பு, தலைப்புக்குப் பொருத்தமானதாக, சுழற்சிமுறையில் பிள்ளைகளின் விருப்புக்கு ஏற்ப கொண்டிருக்கும். சிறு விஞ்ஞானப் பரிசோதனைகள், சித்திரங்கள். கூட்டாளியின் செயற்பாடுகளும் பிராணிகள் அல்லது பூச்சிகளை அவதானித்தல் போன்றவையும் உள்ளடங்கும்.
வெளிக்கள விளையாட்டு உபகரணங்களான சமநிலப் பலகை. சீசோ, ஏரிகளும் வழக்கிகளும், ஊஞ்சல் போன்ற பல்வகையான. பிள்ளைகளுக்குப் பொருத்தமான, விளையாட்டுப் பொருட்களும் முன்பள்ளியில் இடம்பெற வேண்டும். மணல் நிறைந்த இடமும் சுதந்திரமான விளையாட்டுக்குப் பொருத்தமானது.
செயற்பாடுகளைச் செய்யக்கூடிய வகையில் பிள்ளைகளைக் குழுக்களாக ஒழுங்குபடுத்த வேண்டும். இதனை வயது அடிப்படையிலும் பிள்ளைகளது ஆர்வத்திற்கேற்பவும், திறமை அடிப்படையிலும் அல்லது கலந்தும் குழுக்களை அமைக்கலாம். நாளாந்த வேலைத்திட்டம் எல்லாம் பரப்புகளையும் தழுவி, அபிவிருத்தித் தேவைகளைக் கவனத்திற்கொண்டு, கற்றல் அனுபவங்களைத் திட்டமிட வேண்டும். ஓய்வு நேரங்கள், இடைவேளைகள். குழுச் செயற்பாடுகள், வேலைத்திட்டத்தில் அடங்கியிருக்க வேண்டும்.
ஒரு பொதுவான நாளாந்த வேலைத்திட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும். அவ்வேலைத்திட்டம் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை ஆவவோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்க்கும் வகையில் அமைக்க வேண்டும். பாடசாலைக்கு வரும் நேரம், வெளிக்கள விளையாட்டு, ஒய்வு நேரங்கள், இடைவேளைகள். குழுச்செயற்பாடுகள். வேலைத் திட்டத்தில் அடங்கியிருக்க வேண்டும். ஆசிரியரின் இடையறாத வழிகாட்டல் மிக முக்கியமானது.
உதாரணத்துக்கான மாதிரி கால அட்டவணை
8.00 - வாழ்த்தி வரவேற்றலும் சுகாதாரப் பழக்கங்களைப் பார்வையிடுதலும்,
8.15- பாடல்கள், சமய நிகழ்வுகள், நாள் வேலைத் திட்டமிடல்.
8.30 உள்ளக விளையாட்டு விருப்பு நேரம், கற்றல் நிலையங்கள், பெரிய குழு. சிறிய குழு, தனிநபர் செயற்பாடுகள். அறிவாற்றல், ஆக்கச் செயல், சமூக மனவெழுச்சிப் பரப்பு, சுத்தம் முதலியன.
9.30 உணவு இடைவேளை.
9.45 சுயாதீன விளையாட்டு, வெளிக்கள உடல் அபிவிருத்திச் செயற்பாடுகள்.
10.15 - கதை சொல்லுதல்.
10.30 - இசையும் அசைவும், அபிநயப்பாடல்கள்.
10.45 - நாள் வேலைச் சுருக்கம், செயற்பாட்டு முடிவு. வீடு செல்ல ஒழுங்குபடுத்தல்.
11.00 - பாடசாலையிலிருந்து கலைந்து செல்லுதல்,
முன்பள்ளியைச் சூழவுள்ளவர்களோடு தொடர்புகொண்டு, வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடலாம். பக்கத்தில் உள்ள வயற்பரப்பு, சந்தை. கடை, கோயில், தொழிற்சாலை போன்றவற்றிற்குப் பிள்ளைகளைக் கூட்டிச்சென்று பார்வையிடலாம். பிள்ளைகளோடு தபாற்காரர், மரக்கறி, மீன் விற்போர் மற்றும் எமக்கு உதவுவோரை உரையாட ஒழுங்கு செய்யலாம். தராசு, சைக்கிள், தபால், ரயர், மணி போன்ற பொருட்களையும், சிறிது பெரிது, நீளம். கட்டை. கூடியது. குறைந்தது என்பன போன்ற எண்ணக்கருக்கள் பிள்ளைகள் மனதில் உருவாக இல்வகைச் செயற்பாடுகள் உதவும்.
முன்பள்ளியில் கற்பித்தல் மிகவும் சிக்கலான பணி இலகுவானதல்ல. ஆனால் அழுத்தமான புதுமைகளுடனான, செயற்பாடுகள் நிறைந்த அணுகுமுறையினால் மகிழ்ச்சியும் கும்மாளமும் நிறைந்து, மன நிறைவு கொள்ள வழி வகுக்கலாம். பொது அறிவு. திறமான தொடர்பாடற்திறன். அவதானிக்கும் திறன், அவற்றை விளங்கிக்கொள்ளுந்திறன், வரையும் ஆற்றல். சூழலை உற்சாகப்படுத்திக் குதூகலிப்புக்கு உள்ளாக்குந் திறன் ஆகியன முன்பள்ளி ஆசிரியருக்கு இன்றியமையாதன.
முன்பள்ளி ஆசிரியர் பாடத்திட்டம், பாடக்குறிப்பு பாடப்பதிவுடன் ஒவ்வொரு பிள்ளைக்கு முரிய முன்னேற்றம் படிவத்தைப் பேணி பிள்ளைகாது திறன் விருத்திகளைப் பதிந்து மதிப்பிட வேண்டும்.
முன்பள்ளி கற்பித்தலில் ஒரு நிறைவான, முறையான அணுகுமுறையுண்டு, அதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் எம்.எல்.ஈ.என்பர். ஆசிரியர் கற்பித்தலின்போது, அல்லது கற்றற் செயற்பாடுகள் உருவாக்கும்போது பிள்ளையுடன் விருப்புநோக்குடன் நடுவராகவிருந்து தலையிடுதல், அதாவது பிள்ளையின் கற்றல் வாய்ப்புகளில் தலையீட்டு, கற்றல் அனுபவங் களை உருவாக்குதல் என்பதுதான் அதன் சராமாகும்.
இதன் முழுமையான நோக்கம். பிள்ளைகள் தமது பண்பாட்டுக்குள். தாங்கள் கற்கவேண்டியவற்றை இலகுவாக்கிக்கூறும் அணுகுமுறையாகும். இது மிகவும் இலகுவான அணுகுமுறையாகும். ஐந்து தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டது. இதனை இலகுவில் விளங்கிக் கொள்ளலாம். பெற்றார் தொடக்கம் ஆசிரியர்கள் வரை, வீடுகளை ஒழுங்குபடுத்துவது தொடக்கம் நிறுவனமயப்படுத்தல் வரை, யாவரும் பிரயோகிக்கலாம். இந்த அணுகுமுறைமை அனுசரணை அல்லது தலையீட்டு மைய எண்ணக்கருவில் தங்கியுள்ளது.
ஒவ்வொரு பின்னையும் ஒரு தேவையையும் ஒரு உரிமையையும் கொண்டுள்ளது. பிள்ளைகளது கலாசாரம். சூழல், அதனைச் சூழந்துள்ள உண்மை நிலைகளை புரியவைக்க வேண்டும் இவற்றினூடாக அவர்களது தேவைகளை, உரிமைகளைப் பெறுவதற்கு வழிகாட்ட வேண்டும். இதற்குத் தாய்தான் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்கிறார். பலாசார நிகழ்வுகளில் தலையிடும் பணி, அல்லது அனுசரிக்கும் பொறுப்பு, தாயெனும் பராமரிப்பாளர் மீதே விழுகிறது. அத்துடன் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள். உடன்பிறப்புக்களும் சேர்ந்து கொள்கின்றனர். ஆகவே இவ்வகை முறைமைகளின் செயற்பாடுகள் வளர்ந்தோரின் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் தங்கியுள்ளது. இந் திட்டத்தில் வளர்ந்தோரின் வெற்றி கல்வி நிகழ்ச்சித்திட்ட பயிற்சி. நெறிப்படுத்தல், மதிப்பிடல், பராமரிப்பவரின் பங்குகொள்ளும் மனப்பாங்கிலும் தங்கியுள்ளது. இதன் குறிப்பான உள்ளடக்கம் கலாசாரமாகும். பண்பாடு என்பது இயற்கையானது. அதனை இலகுவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
பேராசிரியை பினைனா கெலின், தனது ஆய்வினை நடைமுறைப்படுத்த ஐந்து முக்கிய விதிகளை இனங்கண்டார். அவை ஆரம்பப்பிள்ளைப்பருவ அறிவு விருத்திக்கு முக்கியமான சாதனங்களாகும். இலகுவாக புரிந்துக்கொள்ளக்கூடியன. அவர் அனுசரணை அல்லது தலையீடு எண்ணக்கருவை எமயமாகக் கொண்டு தனது ஆய்வினை மேற்கொண்டார்.
அதன் பின்னர் பேராசிரியர் ஆர்.பியுஸ்ரின் தனது சகபாடிகளை பல வருடங்களாக 12 அலகு அளவு வகைகளை சர்வதேச கற்றல் வசீகரித்தல் நிலையத்தில் உருவாக்கினார். பேராசிரியர் கே.கண்டீற் அவர்கள் அறிதிறனை ஐந்து தலைப்புகளில் அறிவாற்றற் பரிமாணங்களுக்கு உதவமுகமாக, தாய்-பிள்ளைக்கு இடையிலான மனவெழுச்சி வெளியிடும் விதங்களை உள்ளடக்கிய ஆம் சுழற்சி முறையினை வெளியிட்டார்.
கலாசார அல்லது பண்பாட்டு அறிவு, அந்தக் கலாசாரத்தைச் சேர்ந்த ஒருவரால் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது. நெருங்கிய உரையாடலாக இருவரிடையே பரிமாறப்படுகிறது இக்கற்றல் அனுபவங்கள் ஒரு திட்டமற்ற அனுசரிப்பு அல்லது தலையீடாக மாறுகிறது என பேராசிரியர் குண்டீற் கூறுகிறார்.
பின்வரும் ஐந்து கூறுகளும் பிள்ளைக்கும் பராமரிப்பவருக்குமிடையே காணப்படும். அனுசரிப்பு அல்லது தலையீட்டு உள்ளாக்கத்தின் இயல்புகளை தெரிவிக்கின்றன.
நோக்கத்துடன் பரிமாறிக்கொள்ளல்
ஆசிரியர் பிள்ளையோடு தொடர்புகொண்டு அதற்கேற்ப துலங்கவைப்பதாயின், தனது கவனத்தை பிள்ளையின் இயல்பிற்கும் விருப்பத்திற்கேற்றவாறும். இசைவாக்கம் செய்ய வேண்டும். இதனைச் செய்தபின் ஆசிரியர் பிள்ளையின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அக்கவன ஈர்ப்பு ஒரு பொருளின் மீதோ. தலைப்பின் மீதோ மதிப்பையும் உயர்வையும் ஏற்படுத்திவிடும்.
நினைத்த பொருள் மீது ஆசிரியரதும் பிள்ளையினதும், கவனமும் எண்ணமும் ஒருங்கிணையும்போது நலமான அனுசரணை அல்லது தலையீடு உருவாகிவிடும்
இந்நிலையில் ஆசிரியா நினைத்தது நிறைவேறிவிடும். பிள்ளையும் தன் கவனத்தை ஆசிரியரின் பால் திருப்புவான். ஆசிரியரின் எண்ணமும் மனவறுதியும் பிள்ளையின் பரிமாறிக்கொள்ளும் தன்மையும் சங்கமிக்கிறது. இந்த முதலாவது முறையான எம்.எல்.17ஆசிரியர் விருப்பு நோக்குடன் நடுவராக இருந்து தலையிடுதல் அல்லது அனுசரித்து உதவும் கற்றல் அனுபவம் ஏனைய நிலைமைகள் தொடர ஏதுவாகிறது. 02. கருத்தினைப் பிள்ளைகளுக்கு விளக்குவதற்கு தலையிடல்,
ஆசிரியர் பிள்ளைகள் வாழும் சூழலிலுள்ள மக்கள், பொருட்கள் பற்றிய அதிசயமான அற்புதமான அனுபவங்களைச் சொல்லும் போதே அவற்றின் பெயர்களையும் கருத்துக்களையும் சொல்வார். இதன் ஊடே பிள்ளைகள் உலகின் பண்பாட்டும் பாராம்பரியங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
03.கருத்தினை விரிவாக்கல்.
ஆசிரியர் தனது கைவசமுள்ள தலைப்பிளை விளக்கும்போதும், ஒப்பீடு செய்யும்போதும் தெளிவுபடுத்தும்போதும். வினாவும்போதும் தொடர்புடைய சான்றுகளை இனங்காட்டும் போதும், தொடர்பான கதைகள் சொல்லும்போதும் சில சமயங்களில் குறிப்பிட்ட பாடப் பரப்பின் எல்லைக்கு அம்பாலும் செல்வதுண்டு. ஒரு பொருளோடு தொடர்பை ஏற்படுத்தல் அல்லது ஒரு நிகழ்வோடு தொடர்புடைய, முதல் நடந்த நிகழ்ச்சியின் அனுபவங்களைப் பொருத்தமான நேரத்தில் தொடர்புபடுத்தல் அல்லது எதிர்பார்த்தல் போன்றனவும் கருத்தினை விரிவடையச் செய்ய வல்லது.
04. தகுதி பற்றி எண்ணங்கள்.
ஒரு பின்னை ஏதாவதொரு செயலை நன்றாகச் செய்யும்போது பாராட்டி போற்றுதல் மூலம், பிள்ளைக்கு தனது தகுதிபற்றிய உணர்வை ஏற்படுத்தலாம். அதேவேளை அச்செயல் ஏன் நன்றாக இருந்தது என்பதனையிட்டு ஆசிரியா பிரிவாக விளக்க வேண்டும். இது பிள்ளைக்குச் சாதகமான தனது பிரதிபிம்பத்தை உருவாக்க உதவும் அதேவேளை அறிவைப் பெறவும் எதிர்காலத்தில் திறமையாகச் செய்யவும் உதவும்
05. திட்டமிடலும் ஒழுங்குபடுத்தலும்.
ஆசிரியர் பிள்ளையின் இயல்பிற்கேற்ப தன்னைச் சரிப்படுத்தி, ஒரு செயலை வரிசைப்படுத்தி திட்டமிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும் அதன் மூலம் குறிக்கோளை அடைய வழிவகுக்கலாம். இவ வழிமூலம் பிள்ளை தனது சுயகட்டுப்பாட்டை உருவாக்க முடியும்: பிரச்சினை தீர்க்கும் அணுகுமுறைகளில், மாறாத பயன்தரும் உபாயங்களை கையாளும். ஒரு செயலை செய்யும் முன், திட்டத்தை வகுத்து மனதில் கிரகிக்கும் தன்மைக்கேற்ப ஒழுங்குபடுத்திவிடும்போது, கற்றற் செயற்பாட்டிலும் நடத்தையிலும்
மாற்றம் ஏற்படும். அதேபோல் பிள்ளை சார்ந்த கலாசாரத்திற்கேற்ப மனவெழுச்சிகளை வெளியிட பலவழிகளேற்படும்.
ஏன் அனுசரிப்பு அல்லது தலையீடு கற்றல் அனுபவ அணுகுமுறை வலிமை பெறுகிறது. இவ்வணுகுமுறை ஒரு கலையாகும். பிள்ளைகளின் மனதில் கிரகித்தல் விருத்தியை வளர்த்தெடுக்க முயற்சித்து. பல்வேறு வாழ்க்கை நிலைகளில் பல நன்மைகளை அளிக்கின்றது. பிள்ளைகள் பெரியவர்களானதும் வாழ்க்கையில் நல்ல அனுபவங்களை சாதிக்க சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகிறது.
இக்கலை ஒருவரின் தன்னம்பிக்கையை விருத்தியுற வைப்பதற்கு அடிப்படையாகிறது. என்னால் முடியாது. அதைச் செய்வதற்கு நான் தகுதியற்றவன், என்ற நிலைப்பாடு மறைந்து 'என்னால் முடியும்' என்ற துணிவை ஏற்படுத்துகிறது.
அணுசரனைத் தலைமீட்டு கற்பித்தல் அனுபவங்கள்' எனும் நூவில் அதன் ஆசிரியர் அனுசரிப்புத் தலைமீட்டுக் கற்றல் அனுபவ அணுகுமுறை, மனித இனத்திற்கு ஒப்பற்ற இரண்டு பாரிய இயல்புகளுக்குக் காரணமாகின்றது. இந்த இரு இயல்புகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இவ் இரு இயல்புகளும் மனித இனத்தின் மாறுந் தன்மைக்கும், இட்டுச் செல்லும் தன்மைக்கும். வளர்ச்சிக் கட்டங்கள் பூராகவும் உதவு கிறது. அறிதல் கட்டமைப்புக்களை பலவிகற்பமாக்கும் போக்கினையும் விளக்குகிறார்,
மனித இனத்திற்கு ஒப்பற்ற மிகப் பிரதான குணவியல்புகளில் ஒன்று, அதன் நெகிழ் தன்மையாகும். மனித இனத்தின் அறியும் கட்டமைப்பை ஆணித்தரமாக மாற்றுவதற்கும் பலவிகற்பமாக்குவதற்கும் அல்லது பரந்துபட வைப்பதற்கும் பொருத்தமுடைய தாக்கு கின்றது. சிக்கலானதும் பழக்கமில்லாததுமான சந்தர்ப்பங்களில் மனிதன் தன்னை இசைவாக்கம் பெறக்கூடிய ஆற்றலைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. இக்கற்றல் முறை இல்லாதவிடத்து உயிருக்கு நெகிழ்வுள்ள தன்மையாக மாறிவிடும். தூண்டல் முறை யற்றதாக மழுங்கடிக்குந் தன்மையற்றதாகிவிடும் சூழலிலிருந்து பெறும் அனுபவங்களும் பயனற்றதாகிவிடும் என பேராசிரியர் ப்பூர்ஸ்ரீன் கூறுகிறார்.
அனுசரனைத் தலையீட்டு முறை அல்லது நடுவர் ஊடான கற்றல் முறை பராமரிப்போரையும் பிள்ளைகளையும் பங்குகொள்ள வலுவூட்டுகிறது. இது கலாசாரத்திற்கு வெளியே நடைபெற முடியாது. கற்றற் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்வதற்கும். மாற்றத்தை அதிகரித்து ஏற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது. மிக விரைவாக மாறும் உலகத்தை எதிர்நோக்கும் பிள்ளையின் பார்வையில், மேலதிக ஊக்கத்தை ஊட்டுகிறது. அறிதல் பிரதிபலிப்புக்கு அடிப்படைத்தளமிடுகிறது. எதிர்காலத்திற்கு எதிர்வு கூறும் ஆற்றலை வழங்குகிறது. பிள்ளைகளும் வளர்ந்தோரும் பங்கு கொள்ள வாய்ப்பளிக்கிறது.
.jpeg)
0 Comments